விளையாட்டு

பாகிஸ்தானுக்கு ICC இறுதி எச்சரிக்கை விடுப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு , சர்வதேச கிரிக்கெட் சபை ICC மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் ஒளிபரப்பு நிறுவனத்திடம் இருந்து சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICC T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது. இதற்கு ICC கடும் எதிர்ப்பை வெளியிட்டது.

கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

எனினும், இந்தியாவுக்கு எதிராக ஆட மாட்டோம் என்பதில் பாகிஸ்தான் உறுதியாகவுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி. மீண்டும் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானின் ஆண்டு வருமான பகிர்வை 316 கோடி (இந்திய மதிப்பு) ஐ.சி.சி. நிறுத்தி வைத்துள்ளது.

ஒளிபரப்பு நிறுவனம் வழக்கு தொடுத்தால் பாகிஸ்தானுக்கு எந்த விதத்திலும் ICC உதவியாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!