இந்திய வரவு செலவு திட்டம் – உள்கட்டமைப்பு பணிகளுக்காக 133 பில்லியன் ஒதுக்கீடு!
ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் புதிய நிதியாண்டில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 12.2 டிரில்லியன் ரூபாயை ($133.08 பில்லியன்) செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இன்று முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நடப்பு நிதியாண்டில் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 11.21 டிரில்லியன் ரூபாயை விட இந்த செலவுத் திட்டம் அதிகமாகும், இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும் எனக் கூறியுள்ளார்.





