இலங்கை

பொது அவசரகால நிலை நீட்டிப்பு!

இலங்கையில் பொது அவசரகால நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 28 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் உயிர்வாழ்வை உறுதி செய்தல் மற்றும் பொது வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த அவசரக்காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசரகால ஏற்பாடுகள் மற்றும் அதிகார விதிமுறைகளைத் திருத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய அவசரகால உத்தரவுகளுக்கு ஏற்ப பல முந்தைய உத்தரவுகளைத் திருத்தவும், பல புதிய உத்தரவுகளை சேர்க்கவும்  அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!