அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு!
விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் Ajit Pawar இறுதிச் சடங்கு இந்திய நேரப்படி இன்று (29) முற்பகல் நடைபெறவுள்ளது.
பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் இடம்பெறவுள்ள இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் என தெரியவருகின்றது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் நேற்று பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது
.
அஜீத் பவார், விமானிகள் உட்பட ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அஜீத் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலேயே இன்று முற்பகல் 11 மணியளவில் அவரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், மாநில அரசு கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, பாராமதி விமான நிலையத்தில் இந்திய விமானப் படை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.





