உலகம்

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

சர்வதேச மாணவர்களின் சேர்க்கை கல்வி நிறுவனங்களின் அளவுக்கு ஏற்ப நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கும் நோக்கில் புதிய அமைச்சரவை வழிக்காட்டுதலை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய புதிய வழிகாட்டுதல்கள் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அமைச்சரவையின் பழைய வழிகாட்டுதல் 111 மாற்றி இந்த 115 ஆவது வழிகாட்டுதல் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதிய விதியானது பிராந்திய மற்றும் பெருநகர இடங்களில் கல்வி நிறுவனங்களிடையே சர்வதேச மாணவர்களின் சேர்க்கையை கல்வி நிறுவனங்களின் அளவுக்குக் ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும்” என்று சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சர் ஜூலியன் ஹில் (Julian Hill) குறிப்பிட்டுள்ளார்.

புதிய விதியானது அனைத்து கல்வி நிறுவனங்களையும் சமமாக நடத்தி குடிவரவுச் செயலகம் மாணவர்களுக்கான நுழைவு அனுமதியை வழங்க வழிவகுக்கும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த புதிய விதி நடைமுறையில் எவ்வாறு செயற்படும் என்பதை விளங்கப்படுத்துவதற்காக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த நிறுவனங்களுக்கான தகவல் அமர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!