போஸ்னியாவில் (Bosnian) ஓய்வு பெற்றவர்கள் தங்கும் விடுதியில் தீவிபத்து – பலர் பலி!
போஸ்னிய (Bosnian)நகரமான துஸ்லாவில் (Tuzla) ஓய்வு பெற்றவர்கள் தங்கும் விடுதியில் நேற்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தின் மேல் தளங்களில் முதலில் பரவிய தீ பின்னர் அந்த தளத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பத்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் எனவும் போஸ்னிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்பு படையினர் சிலரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை போஸ்னிய (Bosnian) காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





