வட அமெரிக்கா

மெக்சிகோவில், மனித எச்சங்கள் அடங்கிய பைகள் மீட்பு!

மெக்சிக்கோவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரமொன்றில் அதிகாரிகள் மனித எச்சங்கள்அடங்கிய 45 பைகளை  மீட்டுள்ளனர்.

கடந்தவாரம் காணாமல்போன இளைஞர்கள் சிலரை தேடிச்சென்றவேளை குவாடலஜரா என்ற நகரில் மனித எச்சங்கள் அடங்கிய குறித்த பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அதில், ஆண்களினதும் பெண்களினதும் உடல்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இன்னமும் எத்தனை உடல்கள் காணப்படுகின்றன என்பது தெரியவில்லை .

மனித எச்சங்கள் நிலப்பகுதி மிகவும் சவாலான ஒன்று என்பதாலும் போதிய வெளிச்சம் இன்மையாலும் தேடுதல் நடவடிக்கைகள் பல நாட்கள் தொடரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழுபேர் காணாமல்போனமை குறித்த தகவல்களை தொடர்ந்து தேடுதல்களை ஆரம்பித்தவேளை இந்த மனித எச்சங்கள்மீட்கப்பட்டன என தெரிவித்துள்ள அரசாங்க அதிகாரிகள் பள்ளத்தாக்கில் தேடுதல்களை மேற்கொண்டவேளை மனித எச்சங்களை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!