நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் 18 பேர் கைது
தீபாவளி மற்றும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு நுவரெலியா சென்ற 18 பேர் போதைப்பொருட்களுடன் கைது செயயப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் மூலம் நுவரெலியாவில் இன்று நடைபெறவிருந்த சட்டவிரோத விருந்துக்குச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
18 முதல் 28 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் தெமட்டகொட, கம்பஹா மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் குஷ், ஹெராயின், ஐஸ், போதை மாத்திரைகள் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளது.





