அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

WhatsApp பயனர்களை மகிழ்விக்க புதிய தகவல் ஒன்றை WhatsApp நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் WhatsApp செயலி, கோடிக்கணக்கான மக்களால் ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பயனாளர்களின் எண்ணிக்கையை தக்கவைத்துக்கொள்ள WhatsApp நிறுவனம் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக WhatsApp நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.

WhatsAppஇல் username வசதியை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன் மூலம், பேஸ்புக்கில் usernameஐ வைத்து பயனாளர் யார் என்பதை தெரிந்துகொள்வது போன்று, இனி வாட்ஸ்அப்பிலும் தெரிந்துகொள்ள முடியும். இதற்காக, WhatsApp username மற்றும் redesigned settings interface உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்த புதிய அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது அக்கவுண்ட்டில் username வைத்துக்கொள்ளலாம். இதனை WhatsApp செட்டிங் _ profile ஆப்ஷன்களில் இயக்க முடியும்.இந்த புதிய அம்சங்களின் மூலம் பயனாளர்களின் தனியுரிமை பாதுகாக்கபடுவதோடு, கையடக்க தொலைபேசி எண் மூலம் பயனாளர்களை அறிந்துகொள்வதற்கு பதிலாக username மூலம் அறிந்து கொள்ளலாம்.

(Visited 14 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content