உத்தரபிரதேசத்தில் பள்ளி வேனில் 4 வயது சிறுமியை வன்கொடுமைக்கு செய்த ஓட்டுநர்

உத்தரபிரதேச காவல்துறையினர் நான்கு வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி வேன் ஓட்டுநரை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் முகமது ஆரிஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
“புகார்தாரர் ஒருவர் தனது 4 வயது மகள் ஒரு பள்ளியில் படிக்கிறாள் என்றும், அவள் பள்ளிக்குச் செல்லும் வேனின் ஓட்டுநர் முகமது ஆரிஃப் இவ்வாறு செய்ததாகவும் காவல் நிலையத்திற்குத் தெரிவித்தார். இதை அறிந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த விஷயத்தை விசாரிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. முகமது ஆரிஃப் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி முதல்வரிடம் புகார் அளித்த போதிலும் பள்ளி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குழந்தையின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)