செய்தி விளையாட்டு

INDvsENG – முதல் இன்னிங்ஸில் 465 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. சிறப்பாக விளையாடிய ஒல்லி போப் 106 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஹாரி ப்ரூக் 99 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இறுதியில் ஜேமி ஸ்மித் 40 ரன்களும் வோக்ஸ் 38 ரன்களும் அடிக்க 465 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!