செய்தி பொழுதுபோக்கு

பதிப்புரிமை வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 கோடி செலுத்த உத்தரவு

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம், 2 கோடி அபராதம் விதித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்பட விவகாரம் தொடர்பில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தில் உள்ள ‘வீர ராஜா வீர’ பாடல் தனது தந்தை மற்றும் உறவினர் இசையமைத்த ‘சிவ ஸ்துதி’ பாடலின் பிரதியாக இருப்பதாகக் கூறி கர்நாடகாவைச் சேர்ந்த பாடகர் ஃபயாஸ் வசிபுதீன் தாகர் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த பாடல் பிரதி செய்யப்பட்ட சாயலில் உள்ளதாகத் தெரிவித்து ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழு தரப்பினர் இந்திய மதிப்பில் 2 கோடியைச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!