செய்தி விளையாட்டு

IPL Match 09 – மும்பை அணிக்கு எதிராக 197 ஓட்டங்கள் குவித்த குஜராத்

ஐபிஎல் 2025 சீசனின் 9ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்கோர் 8.3 ஓவரில் 78 ரன்னாக இருக்கும்போது சுப்மன் கில் 27 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார்.

அடுத்து வந்த ஷாருக்கான் 9 ரன்னில் ஏமாற்றம் அளித்து வெளியேறினார். அப்போது குஜராத் 15.3 ஓவுரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் அணி 10.5 ஓவரில் 100 ரன்னையும், 15.5 ஓவரில் 150 ரன்னையும் கடந்தது.

குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.

பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

(Visited 24 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content