இலங்கை: தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா (82) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்.
கடந்த இரண்டு நாட்களாக திடீர் சுகவீனத்தினால் அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)