இலங்கையில் காதல் போர்வையில் பலியாகும் பெண்கள் – 213 கர்ப்ப சம்பவங்கள் பதிவு!
இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் குழந்தை கர்ப்ப சம்பவங்கள் 213 ஆக அதிகரித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், 2023 ஆம் ஆண்டில் 167 குழந்தை கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டில் இது அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
2023 மற்றும் 2024 ஆண்டுகளை ஒப்பிடும்போது குழந்தை துஷ்பிரயோக சம்பவங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
“கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான தரவுகளைப் பார்க்கும்போது, குறிப்பிடத்தக்க அளவு குறைவோ அல்லது அதிகரிப்போ இல்லை. உதாரணமாக, இலங்கையில் அதிகம் பதிவான பாலியல் துஷ்பிரயோகம் காதல் உறவில் நிகழும் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையாகும்.
இதுவே அதிகம் பதிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டில், 1,237 வழக்குகளும், 2024 ஆம் ஆண்டில், 1,254 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இருப்பினும், குழந்தை கர்ப்பங்கள் 2023 இல் 167 ஆக இருந்து 2024 இல் 213 ஆக அதிகரித்துள்ளன. ஒரு குழந்தை பலியாகிறது. குழந்தை பிறப்பாலும் பலியாகிறது. இந்தக் குழந்தை பெரும்பாலும் கல்வித் துறையிலிருந்து வெளியேறுகிறது. இந்த சூழ்நிலையைப் பற்றி குறிப்பாக விவாதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.