ஸ்வீடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமா ; ரகசிய ஆவணங்கள் குறித்து போலீசார் விசாரணை
சுவீடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்ரிக் லேண்டர்ஹோல்ம் திங்கட்கிழமை (ஜனவரி 27) பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார்.
ஹோட்டல் ஒன்றில் ரகசிய ஆவணங்களைஅவர் மறந்துவிட்டு வந்ததையடுத்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில் அவர் பதவிவிலகலை அறிவித்துள்ளார்.ஒரு நேர்காணலுக்குப் பிறகு குறிப்பேட்டையும் விட்டுச் சென்றது, வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் தனது கைபேசியை மறந்துவிட்டு வந்தது என்று ஸ்வீடன் ஊடகங்கள் அண்மைய வாரங்களில் வெளிப்படுத்திவரும் முக்கியமான அவரது தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் தொடர் சம்பவங்களில் இதுவும் ஒன்று.
ஈராண்டுகளுக்கு முன்னர் அவர் பதவியேற்றபோது, பிரதமர் உல்ப் கிறிஸ்டர்ஸனுடனான அவரது நீண்டகால நட்பு குறித்த விவாதம் ஏற்பட்டது.
ரகசிய ஆவணங்களை 2023 மார்ச்சில் ஹோட்டல் மாநாட்டு மைய பாதுகாப்பகத்தில் விட்டுச் சென்றது மிகவும் கடுமையானதாகக் கருதப்படுகிறது.“அதுகுறித்து முன்னோட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது,” என்று ஏஎஃப்பி பெற்ற அறிக்கையில் 61 வயதான அவர் எழுதியுள்ளார்.
“இதுகுறித்து பிரதமரிடம் நான் தெரிவித்துள்ளேன். இச்சூழலில், நான் இனி எனது பணியைத் தொடரமுடியாது என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம், அதனால்தான் நான் பதவி விலகுகிறேன்,” என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சியினர் அவர் பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்த நிலையில், கிறிஸ்டர்ஸன் பல வாரங்களாக லேண்டர்ஹோம் வேலையில் நீடிப்பதற்கு, அவரது திறனை ஆதரித்துப் பேசி வந்தார்.
காவல்துறை விசாரணை அதை இப்போது சாத்தியமற்றதாக்கி உள்ளது என்று பிரதமர் ஜனவரி 27 அன்று தெரிவித்தார்.
சுவீடனின் ‘டேஜென்ஸ் நைஹெட்டர்’ பத்திரிகைச் செய்தியின்படி, அந்த ஆவணங்களை ஹோட்டல் துப்புரவு ஊழியர்கள் கண்டுபிடித்தனர். அவர்களது சக ஊழியர் அவற்றை மீட்டெடுத்தார்.