சீனாவின் DeepSeek – அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
சீனச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான DeepSeek அமெரிக்க நிறுவனங்களுக்கு விழிப்பூட்டும் வகையில் அமைந்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், குறைவான செலவில் உருவாக்கப்பட்டுள்ள கூறியுள்ளார்.
DeepSeek பங்குச் சந்தையில் பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் மேலும் கவனத்தோடு போட்டியிடுவதற்கான நினைவூட்டலாக அது அமையும் என்று நம்புவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளத்.
மயாமியில் (Miami) நடந்த குடியரசுக் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசினார்.
அதிர்ச்சி தரும் பங்குச் சந்தை நிலவரத்தில் ஒரு நல்ல செய்தியும் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். மலிவு விலையில் புத்தாக்கத்தைப் புகுத்த முடியும் என்பதை DeepSeek காட்டுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பல பில்லியன் டாலர் செலவு செய்யாமல் குறைந்த செலவில் புத்தாக்கத் தீர்வுகளை அறிமுகப்படுத்தலாம் என்றார் அவர்.
Deepseek ஏற்படுத்திய அதிர்வலைகளைச் சாதகமாக எடுத்துக்கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார். கடந்த வாரம் டிரம்ப் அமெரிக்க அதிபராக இரண்டாம் முறை பதவி ஏற்றார்.
செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 500 பில்லியன் டொலர் ஒதுக்கவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.