இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு செட்டியார் தெருவின் நேற்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 211,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 195,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 19 times, 1 visits today)