INDvsAUS – இரண்டாம் நாள் முடிவில் 145 ஓட்டங்கள் முன்னிலையில் இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ‘பார்டர்- கவாஸ்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் 4 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.
இந்த இன்னிங்சிலும் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் களமிறங்கினர். பொறுமையாக விளையாடிய கேஎல் ராகுல் திடீரென அதிரடியாக விளையாட முயற்சித்தார். இதனால் அவர் 13 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக மாற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி பண்ட் சிக்சர் அடித்து (29 பந்தில்) அரை சதம் கடந்தார். அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 4 ரன்னில் வெளியேறினார். இதனால் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது.