இலங்கை

இலங்கையில் வெவ்வேறு சம்பவங்களில் சுற்றுலா பயணிகள் நீரில் மூழ்கி 5 பேர் மீட்பு: ஒருவர் பலி

இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் ஹிக்கடுவையில் இடம்பெற்ற வெவ்வேறு நீரில் மூழ்கிய சம்பவங்களில் ஐந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவை கடற்பரப்பில் மூழ்கிய நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளனர்.

அப்போது கடமையில் இருந்த காவல் துறையின் உயிர்காக்கும் அதிகாரிகளால் சுற்றுலாப் பயணிகள் நால்வரும் காப்பாற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 33 மற்றும் 48 வயதுடைய ரஷ்யர்கள்.

இதேவேளை, ஹிக்கடுவ, தோடன்டுவ பிரதேச கடற்பரப்பில் நேற்று மாலை இந்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரும் அவரது மகளும் கடலில் குளித்த போது அடித்துச் செல்லப்பட்டதாகவும், இதன் போது பிரதேசவாசிகள் அவர்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 57 வயதான இந்திய நபர் உயிரிழந்துள்ளார்.

 

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்