செய்தி

துருக்கியில் மருத்துவமனை கட்டடத்துடன் மோதிய ஹெலிகாப்டர் – நால்வர் பலி!

தென்மேற்கு துருக்கியில் இன்று (22.12)  காலை ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர்.

இரண்டு விமானிகள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு சுகாதாரப் பணியாளர் ஆகியோர் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்டை மாகாணமான அண்டலியாவில் நோயாளி ஒருவரை அழைத்துச் செல்வதற்காக முக்லா நகரத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தபோது மருத்துவமனை கட்டடம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

புறப்படும் நேரத்தில் கடும் மூடுபனி இருந்ததாகவும், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் முகலா ஆளுநர் இட்ரிஸ் அக்பியிக் குறிப்பிட்டார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!