செய்தி வட அமெரிக்கா

ஐரோப்பாவிற்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த மாதம் 20ந் தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். தற்போது ஒவ்வொரு துறைகளுக்கும் அதிகாரிகளையும், கேபினட் மந்திரிகளையும் நியமித்து வருகிறார்.

அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவது என்பதில் உறுதி பூண்டுள்ளார். இதனால் வர்த்தகம் தொடர்பான வரிவிதிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா உடனான மிகப்பெரிய வர்த்தக இடைவெளியை குறைக்கவில்லை எனில், மிகப்பெரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவிடம் இருந்து கியாஸ், கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

கடந்த முறை அதிபராக தேர்வானபோது, நீண்ட காலமாக ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவின் முதுகில் பயணம் செய்கிறது. நாங்களும் அதை அனுமதித்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த முறை நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா வழங்கும் அனைத்து கூடுதல் நிதிகளையும் நிறுத்துவிடுவோம், ஐரோப்பிய யூனியன் மிகப்பெரிய அளவில் பங்களிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

2022 அமெரிக்காவின் தரவுகளின்படி, ஐரோப்பிய யூனியன் உடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 202.5 பில்லியனாக இருந்துள்ளது. அமெரிக்கா ஐரோப்பிய யூனியனில் இருந்து 553.3 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

அதேவேளையில் ஐரோப்பிய யூனியன் 350.8 பில்லியன் அளவிற்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி