இலங்கையில் மலை ஒன்றை பார்வையிட சென்ற மாணவர்கள் மாயம்!
கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் அடங்கிய குழு ஹன்டானா மலையை பார்வையிடச் சென்று தொலைந்து போனதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
பின்னர், ராணுவத்தினர் அந்த கும்பலை பத்திரமாக மீட்டுள்ளனர்.
16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களும் இவ்வாறு தொலைந்து போயிருந்ததாக கூறப்படுகிறது.
ஹன்டானா மலையை பார்வையிட்ட அவர்கள், அதில் ஏறி, அங்குள்ள பாதுகாப்பற்ற பகுதிக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
காலில் சுளுக்கு மற்றும் மூடுபனி காரணமாக வழியைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும், திரும்பிச் செல்ல முடியாமல் அவர்கள் தொலைந்து போனதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து 111 ஆவது படைப் பிரிவின் தலைமையகம் மற்றும் 2 ஆவது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் குறித்த குழுவினரை பத்திரமாக மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, இரவு, 8:00 மணியளவில், மாணவர்களை ஏற்றிச் சென்று, காலை நேரத்தில், ராணுவ வீரர்கள், மாணவர்களை பத்திரமாக கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.