இலங்கை

இலங்கையில் சிறுவர்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்பு – பெற்றோர்களுக்கு விசேட எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சளி, டெங்கு உள்ளிட்ட நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றமை காரணமாக, பெற்றோர்கள் மழையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது பெய்து வரும் கனமழையால் டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவது வேகமாக அதிகரிக்கலாம் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் நாட்களில் வெள்ளம் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமானது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!