மத்திய கிழக்கு

வடக்கு காஸாவில் உள்ள வீடுகள் மீது தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்ட இஸ்ரேல் – 57 பேர் பலி

வட காஸாவில் அதிகமானோர் இருந்த குறைந்தது ஐந்து வீடுகள் மீது இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) வெடிகுண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்வதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். பலரைக் காணவில்லை என்றும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

தாக்குதல்களில் 57 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தரப்பு ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், காஸா சுகாதார அமைச்சு, அதிகாரபூர்வமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையை உடனடியாக வெளியிடவில்லை.

தாக்குதல்களைப் பற்றி இஸ்ரேலிய ராணுவமும் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், ஹமாஸ் தரப்பு ஊடகங்கள் உயிரிழந்தோர் எண்ணிக்கையை மிகைப்படுத்திச் சொல்கிறது என்று இஸ்ரேலிய ராணுவம் பலமுறை குறை கூறியிருக்கிறது.

காஸாவில் குறைந்தது 48 பேர் இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பலியானதாக புதன்கிழமையன்று (நவம்பர் 20) காஸாவின் சுகாதார அதிகாரிகள் கூறினர்.

வீடுகள், மத்திய காஸாவில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டோருக்குப் பாதுகாப்பு தந்த பள்ளி, வட காஸாவில் உள்ள பழம்பெரும் மருத்துவமனை போன்றவற்றின் மீது தாக்தல்கள் நடத்தப்பட்டதாக காஸா மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர். மனிதாபிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென தெற்கு காஸாவில் ஒதுக்கப்பட்டிருந்த அல்-மவாசி, ராஃபா ஆகியவற்றின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

காஸாவில் எந்தப் பகுதியும் இப்போது பாதுகாப்பானது இல்லை என்று பாலஸ்தீன, ஐக்கிய நாட்டுச் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள், கடந்த சில வாரங்களாக வட காஸாவைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அப்பகுதியில் மூன்று முக்கிய நகரங்களை இஸ்ரேலிய ராணுவம் சுற்றி வளைத்தது. அப்பகுதிவாசிகளை வெளியேறுமாறும் அது உத்தரவிட்டிருந்தது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.