ஐரோப்பா

ரஷ்யாவில் 7 வயது சிறுவனின் செயல் – வேலை வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிறுவனம்

ரஷ்யாவில் ஒரு மென்பொருள் நிறுவனம் 7 வயதுச் சிறுவனுக்கு வேலை வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செர்கெய் என்ற அந்தச் சிறுவன் சம்பளம் பெறும் வயதை எட்டியவுடன் தனது நிர்வாகக் குழுவில் சேர்ந்துவிடலாம் என்று Pro32 எனும் அந்த நிறுவனம் கூறியது.

செர்கெய் ஐந்து வயதிலிருந்து மென்பொருள் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக தெரியவந்துள்ளது.

ரஷ்யச் சட்டத்தின் கீழ் ஒருவர் 14 வயதான பின்பு தான் சம்பளம் பெறும் வேலையில் சேர முடியும். அது வரை செர்கெயுடன் வேறு வழிகளில் இணைந்து செயல்படுவது குறித்து அவனது பெற்றோருடன் பேசியதாக Pro32 நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

செர்கெயிடம் ஆச்சரியப்படுத்தும் வகையில் மென்பொருள் திறனும் அதைக் கற்றுக்கொடுக்கும் திறனும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சிறுவனுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்