இலங்கை

இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய நீர்மூழ்கி கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘ஐஎன்எஸ் வேலா’ நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

67.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 53 பணியாளர்கள் உள்ளனர்.

‘ஐஎன்எஸ் வேலா’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் வரும் 13ம் திகதி இலங்கையில்  இருந்து புறப்பட உள்ளது.

அந்த காலகட்டத்தில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளில் அதன் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்திய கடற்படையினர் குழு நாட்டின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக பல பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)
See also  இலங்கை: சமூக ஊடகங்கள் வழியாக தேர்தல் சட்ட மீறல்கள்! தேசிய தேர்தல் ஆணையம்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content