இலங்கை உயர் பாதுகாப்பு கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறாக மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள உயர் பாதுகாப்பு கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட கடற்பரப்பில் மூன்று டிங்கி படகுகளை இயக்கி, வலை கியர்களை பயன்படுத்தி மீன்பிடித்த போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் உதவியுடன் பொலிஸ் மரைன் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
39, 42 மற்றும் 49 வயதுடையவர்கள் பமுனுகம பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் மரைன் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
(Visited 2 times, 2 visits today)