இலங்கை

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை சுங்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய சுனில் ஜயரத்ன இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்கவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று (04) அவர் இந்தப் பணிகளை பொறுப்பேற்றுள்ளார்.

திரு.சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத் திணைக்களத்தில் 37 வருடங்கள் பணியாற்றியதோடு அதன் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

சுமார் மூன்றரை ஆண்டுகள் சுங்கத்துறை செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அவர் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் கான்பெரா பல்கலைக்கழகத்தில் சுங்க சட்டம் மற்றும் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டதாரி ஆவார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்