இந்தியா

இந்தியாவின் கர்நாடகாவில் வீடு புகுந்து குழந்தைகளைக் கடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

கர்நாடகா மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு பேர், அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளைக் கடத்திச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் ‘சிசிடிவி’ கண்காணிப்புக் காணொளிக் கருவியில் பதிவாகியுள்ளது.

அதில், முகமூடி அணிந்த இரண்டு பேர், கூர்மையான ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அப்படியே தூக்கிச் சென்று வெளியில் இருந்த வாகனத்தில் ஏற்றிச் செல்வது தெரிகிறது.

இதுதொடர்பாக குழந்தைகளின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர், கடத்தல்காரர்களின் வாகனப் பதிவு எண்ணைக் கொண்டு அவர்களை மடக்கிப் பிடித்தனர். அப்போது கடத்தல்காரர்கள், காவலர்களைத் தாக்க முயன்றதால் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைப் பிடித்தனர்.

கடத்தல்காரர்களிடம் இருந்து இரண்டு குழந்தைகளையும் காவலர்கள் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கடத்தல்காரர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாகக் குழந்தைகள் கடத்தப்பட்டனரா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

See also  ராஜஸ்தானில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் உயிரிழப்பு

குழந்தைகள் கடத்தப்பட்ட சிசிடிவி காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

(Visited 3 times, 3 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content