இலங்கை

இலங்கையில் சீன பிரஜைகளின் மற்றுமொரு குழுவினர் கைது!

ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது இணையத்தில் கணினி குற்றங்களைச் செய்த சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகளின் மற்றுமொரு குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி காவற்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் சீனர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள்.

அவர்களிடம் இருந்து 05 கையடக்கத் தொலைபேசிகள், உரிமையாளர் இல்லாத வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் 04 வங்கி அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று (24ஆம் திகதி) மாலை பொபே வீதி, காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிந்தோட்ட பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்