குளிரூட்டும் சாதனத்தில் கோளாறு சீனாவில் 700,000 கார்களை மீட்டுக் கொள்ளும் BMW
சீனாவில் ஏறக்குறைய 700,000 கார்களை BMW மீட்டுக் கொள்ளவிருக்கிறது.குளிரூட்டும் சாதனத்தில் கோளாறு இருப்பதால் அந்நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உள்ளூரிலிருந்து 499,539 கார்களும் 2025 மார்ச் மாதம் 1ஆம் திகதியிலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 188,371 கார்களும் மீட்டுக் கொள்ளப்படும் என்று BMW தெரிவித்தது.இதனை மாநில சந்தை ஓழுங்குமுறை நிர்வாகம் வெள்ளிக்கிழமை அன்று உறுதிப்படுத்தியது.
சில கார்களில் பொருத்தப்பட்டுள்ள குளிரூட்டும் சாதனத்தில் கோளாறு உள்ளது. இது துருப்பிடித்து தீப்பிடிக்க வாய்ப்புள்ளது என்று BMW தெரிவித்தது.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ‘3 சீரிஸ்’, ‘5 சீரிஸ்’ மேலும் இறக்குமதி செய்யப்பட்ட பல ‘எக்ஸ் சீரிஸ்’ உள்ளிட்ட கார்கள் மீட்டுக்கொள்ளப்படுகின்றன.
இந்த நடவடிக்கையால் சீனாவில் கார் விநியோகம் மெதுவடைந்துள்ளது.