இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் பொது தேர்தல் போட்டியை தவிர்க்கும் 3 முன்னாள் ஜனாதிபதி உட்பட் 35 பிரபலங்கள்

35க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவதாக தெரியவந்துளளது.

ஏனைய அமைச்சர்களில் சுமார் ஐந்து முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 10 முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் சுமார் 25 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது நண்பர்களை அழைத்து கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதுமட்டுமின்றி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குழு ஒன்று கட்சி மாறி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது.

 

 

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!