இலங்கையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் ஒக்டோபர் மாதத்திற்கான லாப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எவ்விதத் திருத்தமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு 3,680 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 1,477 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லாப்ஸ் சமையல் எரிவாயு விலை இறுதியான கடந்த ஜூன் மாதம் திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 99 times, 1 visits today)