வட அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தல் :டிரம்ப்புக்கு ஆதரவாக மாறிய ராபர்ட் எஃப் கென்னடி ஜூனி­யர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக இருந்த ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டோனல்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக அரிஸோனாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்துகொண்டார்.

தமது வாழ்க்கையின் பெரும்பகுதி ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக இருந்தவர் 70 வயது கென்னடி.இருப்பினும், கட்சியை விட்டு விலகத் தூண்டிய அதே கொள்கைகள்தாம், அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக மாறத் தம்மைத் தூண்டியதாகக் கூறினார்.

தேர்தலுக்கான 10 மாநிலங்களில் தமது பெயரை மீட்டுக்கொள்ள இருப்பதாக ஆகஸ்ட் 23ஆம் திகதி பீனிக்ஸ் அரிஸோனாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.பேரணி மேடைக்கு கென்னடியை வரவேற்ற டிரம்ப், அவரை ‘தனித்துவமிக்கவர்’ என்றும் ‘திறன்வாய்ந்தவர்’ என்றும் பாராட்டினார்.

இதற்கிடையே, கென்னடிக்கு வாக்களிப்பதாக இருந்த ஆதரவாளர்களைத் தம்வசம் ஈர்க்க முயற்சி செய்யவிருப்பதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

நவம்பர் தேர்தல் நெருங்குகையில் கென்னடிக்கு ஆதரவாக இரட்டை இலக்கில் இருந்த கருத்துக்கணிப்பு சரிந்துவிட்டது. இதற்கு நிதியும் தேசிய அளவிலான பிரசாரமும் குறைந்ததே காரணங்கள் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், டிரம்ப்புக்கு ஆதரவாக கென்னடி மாறியுள்ளதால் அவரின் உறவினர்கள் சீற்றமடைந்துள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்