ஆசியா

தைவானில் உடலுறவுக்கு கட்டணம் வசூலித்த மனைவி.. விவாகரத்தை நிராகரித்து உயர்நீதிமன்றம்!

தைவான் நாட்டைச் சேர்ந்தவர் ஹாவோ. இவருடைய மனைவி ஜுவான். இவர்களுக்கு, கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஹாவோவின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை தொடங்கியிருக்கிறது.

அதன்பின் ‘மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே பாலியல் உறவுக்கு அனுமதி’ என அவரின் மனைவி நிபந்தனை விதித்துள்ளாராம். அதன்பிறகும் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது. ‘2019ஆம் ஆண்டிலிருந்து என்னை அனைத்து விஷயங்களிலிருந்தும் ஒதுக்கிவைத்தார் என் மனைவி. ஆனால் அதற்கு எந்தக் காரணங்களையும் அவர் கூறவில்லை’ என்றுள்ளார் ஹாவோ. இதனால் இருவருடைய திருமண பந்தத்தில் விரிசல் ஏற்பட்டதாக ஹாவோ குறிப்பிடுகிறார்.

இத்துடன் முடியவில்லை பிரச்னை. “2021-இல் என்னிடம் பேச வேண்டும் என்றாலோ அல்லது பாலியல் உறவுகொள்ள விரும்பினாலோ அதற்கு பணம் தர வேண்டும் எனக் கூறினார். என்னிடம் கட்டணமும் வசூலித்தார். மேலும் என்னைப் பற்றி தன் உறவினர்களிடம் தவறாகப் பேசினார்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் 2021ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார் ஹாவோ.

இந்நிலையில் மனைவி ஜுவான், ‘இனி உறவு மேம்படும் வகையில் நடந்துகொள்வேன்’ என கணவர் ஹாவோவிடம் உறுதியளித்து இருக்கிறார். இதனால், கணவர் வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறார். ஆனால் அதன்பின் மனைவியின் போக்கு முற்றிலும் மாறியுள்ளது. குறிப்பாக, கணவரின் சொத்தை தன் பெயரில் மாற்றியுள்ளார் என சொல்லப்படுகிறது.

அத்துடன், தன் கணவர் ஒவ்வொரு முறையும் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவும், பேசவும் 15 டொலர் வசூலித்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹாவோ மீண்டும் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அந்தக் காலத்தில் அவர்கள் இருவரும் நேரிடையாகப் பேசிக்கொள்ளவில்லை என தெரிகிறது. இருவரும் மெசேஜ் வழியே தகவல் தொடர்பை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இதற்கிடையே, இந்த தம்பதி கவுன்சிலிங்கிற்கும் சென்றுள்ளனர். ஆனால் அதிலும் பலனில்லை.

இந்த நிலையில்தான் தைவானில் உள்ள நீதிமன்றம் ஹாவோவுக்கு விவகாரத்து வழங்கியுள்ளது. ‘இந்த உறவுமுறை தீர்க்க முடியாத சிக்கல் நிறைந்திருக்கிறது’ என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், மனைவி ஜுவானுக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை. இதையடுத்து, அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்