இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்திற்கு வெடிமருந்து எடுத்து வந்த இளைஞன் கைது

யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்றைய தினம் வியாழக்கிழமை பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவர் வெடிமருந்துகளை கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் , பேருந்தினை மறித்து சோதனையிட்டனர்.

அதன் போது பேருந்தில் இருந்து 01 கிலோ கிராம் வெடி மருந்து (ரி.என்.ரி) மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து , அதனை கொண்டு வந்த அரியாலை பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)
See also  பவுச்சர் அதிரடி நீக்கம் - மீண்டும் மும்பை அணி பயிற்சியாளராக வந்த ஜெயவர்தனே
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content