இலங்கை செய்தி

மன்னாரில் முன்னாள் போராளி உயிரிழப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  அடம்பன்  பகுதியில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பல்துறை ஆளுமை மிக்க ‘கம்பிகளின் மொழி பிறேம்’ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் (வயது-42) என்ற குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அடம்பன்  வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். இதன்போது தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என சத்தம் போட்டுள்ளார்.

இதன்போது குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

‘கம்பிகளின் மொழி பிறேம்’ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம்குமார் ஒரு கால் மற்றும் ஒரு கையையும் இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை