வட அமெரிக்கா

கல்விக்கு வயது தடையில்லை – அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்ற 105 வயது பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த 105 வயது பெண் ஒருவர் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெர்ஜினியா ஹிஸ்லோப் என்ற வயோதிப ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அது அவர் 83 ஆண்டுக்கு முன்பு தொடங்கிய பயணமாகும். 1941ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெறத் தேவையான பாடங்கள் அனைத்தையும் அவர் பூர்த்தி செய்துவிட்டார்.

அப்போது அமெரிக்கா 2ஆம் உலகப் போரில் போரிட தயாராகிக்கொண்டிருந்தது.

அவரது காதலனும் போரில் சண்டையிடவிருந்தார். ஆய்வறிக்கையை கைவிட்டுவிட்டுத் திருமணம், குடும்பம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்ததாக ஹிஸ்லோப் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் கல்வி மீதான ஆர்வத்தை மறந்துவிடவில்லை. கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தப் பாடுபட்டார். பெண்களே நிறுவிய ஹெரிடேஜ் பல்கலைக்கழகத்திற்கு நிதி திரட்டியுள்ளார்.

பசிபிக் நார்த்வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் அவர் பெயரில் ஓர் உபகாரச் சம்பளமே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அண்மையில் அவரின் மருமகன் ஸ்டான்பர்ட் பல்கலையைத் தொடர்புகொண்டார்.

அப்போது ஹிஸ்லோப் முதுகலைப் பட்டம் பெற அந்த ஆய்வறிக்கை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்