இளம் வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நீரில் மூழ்கி வைத்தியர் ஒருவர் மரணமடைந்த துயர சம்பவம் அம்பாறை மாவட்டம் பாணமை பகுதியில் நிகழ்ந்துள்ளது.
நேற்று சனிக்கிழமை (16) மாலை கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இலங்கநாதன் தக்சிதன் என்ற மருத்துவரே இவ்வாறு நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் மருத்துவராக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று உகந்தை மலை முருகன் ஆலயத்துக்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று வரும் வழியில் பாணமை கடலில் தவறுதலாக வீழ்ந்ததில் மரணம் சம்பவித்திருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
தற்போது மரணமடைந்த வைத்தியரின் சடலம் பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காரைதீவைச் சேர்ந்த மருத்துவ துறைக்கு தெரிவாகிய மாணவனும் நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.