இலங்கை செய்தி

வெளிநாட்டு வேலைகள் வாய்ப்புகள் பற்றி அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 வீதம் ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இம்மாத இறுதியில் முதலாவது குழு இஸ்ரேல் செல்லவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராயும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு, ஆயுதப் படைகள், போர் வீரர்கள் சேவை அதிகார சபை மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதாரம், பொது நிர்வாகம், வங்கி சேவைகளை பெற்றுக் கொடுப்பதில் முன்னுரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக  அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் காணிகளுக்கான ‘பரம்பரை’ திட்டத்தின் கீழ், போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கி தற்போது அனுபவிக்கும் காணிகளின் உரிமைக்கான அனுமதிப்பத்திரம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், சேவையில் ஈடுபடுவோர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் விசேட கடன் வசதிகளை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை