இலங்கை செய்தி

சகோதரியின் பெயரில் டென்மார்க் சென்று பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாண பெண் கைது

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுசீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது டென்மார்க் பிராஜவுரிமை பெற்று டென்மார்க்கில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் கடந்த 2015ஆம் ஆண்டளவில் தனது சகோதரியின் பெயரில் போலியான கடவுசீட்டை பெற்று டென்மார்க் நாட்டிற்கு சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வசித்த அவரது சகோதரி 2019ஆம் ஆண்டளவில் தனக்கு கடவுசீட்டு எடுப்பதற்காக விண்ணப்பித்த போது , அவரது பெயரில் ஏற்கனவே கடவுசீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அவருக்கு கடவுசீட்டு வழங்கப்படவில்லை.

அதன்போதே தனது சகோதரி தனது பெயரில் கடவுசீட்டு எடுத்து வெளிநாடு சென்ற விடயம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தனது தாயரின் இறுதி கிரியைக்காக டென்மார்க்கில் இருந்து வந்தவர் ,

போலியான கடவுசீட்டை பயன்படுத்தி தனது சகோதரியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் வங்கி கணக்கொன்றினையும் ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பில் அறிந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சகோதரி யாழ்ப்பாண பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , டென்மார்க் பிரஜையான பெண்ணை கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை