செய்தி வாழ்வியல்

எடையை குறைக்க நடிகர் விக்ரம் செய்யும் விடயம்!

கோலிவுட்டில் இருக்கும் திறமையான நடிகர்களுள் ஒருவர், நடிகர் விக்ரம். கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் இருக்கும் இவர், கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்.

எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்காக எந்த தூரத்திற்கு வேண்டுமானாலும் சென்று தனது உடல் அமைப்பை மாற்றிக்கொள்வார். இதனால் ஏற்படும் விளைவ்களையும் அசால்டாக சமாளிப்பார். இவருக்கு, இன்று பிறந்தநாள். இதையொட்டி, விக்ரம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்கிறார் என்று பார்ப்போமா?

‘சேது’ படத்தில், சியான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததால் சியான் விக்ரம் என்றே இவருக்கு பெயர் வந்துவிட்டது. ஒரு படத்துக்காக அதன் ஹீரோ எந்த அளவு உடலை மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு மாற்றி திரையில் ரசிகர்களை அசத்துபவர், விக்ரம். இவருக்கு தற்போது 58 வயதாகிறது. இந்த வயதிலும் இவர் இளமை தோற்றத்தில் இருக்க என்ன காரணம்?

நடிகர் விக்ரம், தனது படங்களுக்காக உடல் எடையை குறைப்பது, கூட்டுவது போன்ற பல விஷயங்களை செய்வார். ஷங்கர் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான ‘ஐ’ படத்தில் ஹீரோவாக நடித்தார். அப்போது படத்தின் ஒரு சில காட்சிகளுக்காக அவர் உடல் எடையை அதிகமாக இழக்க வேண்டியதாக இருந்தது. இதை அவர் எப்படி செய்தார் தெரியுமா?

ப்ரோட்டீன் டயட்: நடிகர் விக்ரம், உடல் எடையை குறைக்கும் சமயத்தில் ப்ரோட்டின் டயட் இருந்தாராம். அதாவது, அவர் எடுத்துக்கொள்ளும் அனைத்து உணவுகளும் டயட் உணவாக இருந்ததாம். முட்டை, சிக்கன், நட்ஸ் வகை உணவுகள் போன்றவையை மட்டும் அவர் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

20 ல் இருந்து 57 கிராம் வரை உள்ள கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வாராம். இதனால், உடலில் 80 முதல் 240 கலோரிகள் வரை மட்டுமே சேரும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பலர் இந்த டயட்டை பின்பற்றுகின்றனர். இதனால் அவருக்கு வேகமாக உடல் எடை குறைந்ததாக கூறப்படுகிறது.

நடிகர் விக்ரம், உடல் எடையை குறைப்பதற்காக தினசரி கார்டியோ உடற்பயிற்சிகளையும் செய்து வந்திருக்கிறார். நீச்சல் பயிற்சி, சைக்ளிங், ஓட்டப்பயிற்சி போன்றவற்றை இவர் செய்ததாக கூறப்படுகிறது.

ஒரே மாதிரியான டயட் இருந்தால் போர் அடிக்கும் என்று கூறும் நடிகர் விக்ரம், ப்ரோட்டீன் ஷேக் கேக்ஸ், பேக் செய்யப்பட்ட குக்கீஸ், சியா விதைகள் மற்றும் குயினாவோ உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவாராம்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி