இலங்கை

ஜனாதிபதி சிறுபான்மையினர் மத்தியில் போலி விம்பத்தினை உருவாக்க எத்தனிக்கிறார் – அருன் ஹேமசந்திரா

அண்மைக் காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு போலி விம்பத்தினை உருவாக்க எத்தனிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளருமாகிய அருன் ஹேமசந்திரா தெரிவித்தார்.

திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்சி தாவல்களின் காரணமாக நீதிமன்ற தீர்ப்பினால் விரட்டியடிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற பதவியை இழந்த ஒருவரை ஆளுனராக ஜனாதிபதி அவர்கள் நியமித்துள்ளார். இதனை ஒரு போதும் ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

நசீர் அஹ்மட் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது திருகோணமலை மாவட்டத்தில் ஷாபி நகர் எனும் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக பாரிய சுற்றுச் சூழல் தாக்கம் மற்றும் பாரிய பாலமொன்றும் உடைந்துள்ளது.
இதற்கு முற்று முழுவதுமாக பொறுப்பு கூற வேண்டியவர் வட மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹாபீஸ் நசீர் ஆவார்.

குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்ததாக பதவி விலக்கப்பட்ட புவிச்சரிதவியல் நிறுவனத்தின் தலைவர் கூட இப்போது குறித்த ஆளுநருடன் இணைந்துள்ளார் இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!