பிரித்தானியாவில் ஆன்லைன் டெலிவரிகளை செய்வதில் சிக்கல்!
Sainsbury’s இன் “பெரும்பாலான” ஆன்லைன் டெலிவரிகளை இன்று (16.03) சரிவர செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் Tesco சில ஆன்லைன் ஆர்டர்களையும் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த இரு பல்பொருள் அங்காடிகளும் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரே இரவில் மென்பொருள் புதுப்பித்தலில் ஏற்பட்ட பிழை காரணமாக கட்டணங்களை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சிக்கலைச் சரிசெய்வதற்குச் நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் Sainsbury’s கூறியது.
(Visited 4 times, 1 visits today)