ரஷ்யாவிற்கு எதிராக எவ்வித தாக்குதல்களையும் முன்னெடுக்க மாட்டோம் : மக்ரோன்!
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்குள் பிரான்ஸ் எவ்வித தாக்குதல்களையும் முன்னெடுக்காது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரேன் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பிரான்ஸ் எந்தச் சூழ்நிலையில் படைகளை அனுப்பத் தயாராக இருக்கும் என்பதை விவரிக்க மறுத்துவிட்டார்.
ஆனால், உக்ரைனில் அமைதி நிலவ, நாம் பலவீனமாக இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“ஐரோப்பாவில் போர் பரவினால், அது ரஷ்யாவின் ஒரே தேர்வாகவும் முழுப் பொறுப்பாகவும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)