இந்தியா

கர்நாடகா – தாலுகா அலுவலகத்தில் குடிபோதையில் அரை நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட வாலிபர்!

குடிபோதையில் தாலுகா அலுவலகத்தில் அரை நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் துருவேகெரே தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு சான்றிதழ் பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது இந்த அலுவலகத்திற்கு வினோபா நகரைச் சேர்ந்த ரவி என்பவர் வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.

அப்போது தான் உடுத்தியிருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கிழித்தெறிந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். இதனால் அவர்களுடன் ரவி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பொலிஸார் முன்னிலையில் மனைவி மற்றும் தாயாரை ரவி தாக்க முயற்சித்துள்ளார். இதனால் அவரை அங்கிருந்து பொலிஸார் வெளியேற்ற முயற்சி செய்தனர். இதனால் அவர்களுடன் ரவி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

குடிபோதையில் ஆடைகளைக் கிழித்த ரவி

இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தரையில் உருண்டு ஆர்ப்பாட்டம் செய்ததுடன், தாலுகா அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று ரவி குடிபோதையில் தகராறு செய்தார். இதனால் அவரை துருவேகெரே பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக குடிபோதையில் இருந்த ரவி, மன உளைச்சலில் இப்படி நடந்து கொண்டதாக பொலிஸார் கூறினர். இச்சம்பவம் துருவேகெரே தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content