சோமாலியாவில் பாதுகாப்பு படைத் தளத்தை குறிவைத்து தாக்குதல் – 54 பேர் உயிரிழப்பு!

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பாதுகாப்பு தளத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக படையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)