அறிவியல் & தொழில்நுட்பம்

அமெரிக்காவில் முடங்கிய YouTube – இலட்சக்கணக்கானோர் முறைப்பாடு!

  • February 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் YouTube  செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 320,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் இது தொடர்பில் முறைப்பாடு அளித்ததாக  செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான Downdetector.com தெரிவித்துள்ளது. டவுன்டெக்டரின் (Downdetector) கூற்றுப்படி, ET நேரப்படி இரவு 8.18 மணி  முதல், சமூக ஊடக தளத்தில் 321,958 பேர் சிக்கல்களைப் முறைப்பாடு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப் டிவி வலைத்தளத்தில் 8,923 சிக்கல் அறிக்கைகளையும், கூகிள் 2,694 அறிக்கைகளையும் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா

இந்தியா, பிரான்சுக்கிடையில் 21 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • February 18, 2026
  • 0 Comments

இந்தியா India மற்றும் பிரான்சுக்கிடையில் French 21 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி Modi , பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் Emmanuel Macron முன்னிலையில் இதற்குரிய நிகழ்வு நடைபெற்றது. மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானும் சந்தித்து கலந்துரையாடினர். அதன்பின்னரே பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே மேற்படி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவின் டாடா நிறுவனமும் பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனமும் […]

இலங்கை செய்தி

“13” குறித்து இந்தியா மௌனம்: மனம் திறந்தார் டில்வின் சில்வா!

  • February 18, 2026
  • 0 Comments

“ இந்திய விஜயத்தின்போது அதிகாரப்பகிர்வு, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. இது தொடர்பில் இந்திய தரப்பில் இருந்து எதுவும் கூறப்படவும் இல்லை.” இவ்வாறு ஜே.வி.பியின் JVP செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தியா சென்றிருந்தனர். நாடு திரும்பிய நிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு இந்திய விஜயம் தொடர்பில் டில்வின் சில்வா நேர்காணல் வழங்கி இருந்தார். […]

ஐரோப்பா

கிறிஸ்டி நோயெம் மற்றும் கடலோர காவல்படைக்கு இடையிலான உறவில் விரிசல்!

  • February 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயெம் ( Kristi Noem) மற்ற கடமைகளை விட நாடுகடத்தலுக்கு முன்னுரிமை அளித்தமையால் அமெரிக்க கடலோர காவல்படை தலைமைக்கும் அவருக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடலோர காவல்படையின்  C-130 விமானத்தை புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த பயன்படுத்துவதற்கு கிறிஸ்டி நோயெம் ( Kristi Noem)  உத்தரவிட்டதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன. நோயெமின் வழிகாட்டுதலின் கீழ், கடலோர காவல்படை விமானங்கள் இப்போது முந்தைய விகிதத்தை விட பத்து மடங்கு […]

இலங்கை செய்தி

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • February 17, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான முன்னிலையில் இன்று (17) இந்த வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றைய விசாரணையின் போது உயிரிழந்த சிறுமியின் சகோதரர் வழக்கின் இரண்டாவது சாட்சியாளராக சாட்சியமளித்தார். சிறுமியை கொடுமைப்படுத்துதல், வீட்டுப் பணியில் ஈடுபடுத்தியமை மற்றும் ஆள் கடத்தல் […]

ஐரோப்பா

குறுகிய காலத்தில் ரஷ்யாவின் 09 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்கிய உக்ரைன்!

  • February 17, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ரஷ்யாவின் 09  எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கியேவின் ட்ரோன் படைகளின் தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ரஷ்யாவில் உள்ள 240 இடங்கள் மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்  துருப்புக்களால் தாக்கப்பட்டதாக ரோபர்ட் ப்ரோவ்டி (Robert Brovdi) குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் கிராஸ்னடோர் பகுதியில் உள்ள இல்ஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று இரவு முழுவதும் தாக்கியதாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் உக்ரைன் […]

விளையாட்டு

நேபாளம் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றியிலக்கு

  • February 17, 2026
  • 0 Comments

நேபாளம் அணி 171 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடவுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய (17) மூன்றாவது போட்டியில் ஸ்கொட்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஸ்கொட்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மிட்செல் ஜோன்ஸ் 71 […]

உலகம்

இந்தியா – பிரான்ஸ் புதுமை ஆண்டு தொடக்கம்

  • February 17, 2026
  • 0 Comments

இந்தியா சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், மும்பையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மும்பையில் உள்ள லோக் பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பிரான்ஸ் தூதுக்குழுவினரும் இந்திய தரப்பில் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பின்னர், கர்நாடகாவின் வேமகலில் டாடா ஏர்பஸ் தொழிற்சாலையில் H125 என்ற எடை குறைந்த ஹெலிகொப்டர் தயாரிப்பை கூட்டாக தொடங்கிவைத்தனர். பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதன்போது இந்தியா – பிரான்ஸ் புதுமை ஆண்டை நாங்கள் தொடங்கியுள்ளோம் […]

ஐரோப்பா

பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு – கன்சர்வேடிவ் கட்சிக்கு கடுமையான பாதிப்பு!

  • February 17, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலை ஒத்திவைப்பது தொழிற்கட்சியை விட கன்சர்வேடிவ் கட்சியை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கருத்துக்கணிப்பு நிபுணர் சர் ஜான் கர்டிஸ் (Sir John Curtice) இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கன்சர்வேடிவ் கட்டுப்பாட்டில் உள்ள கவுன்சில்களில் பல நைகல் ஃபராஜின் சீர்திருத்த பிரித்தானிய கட்சிக்கு ஆதரவு கரம் நீட்ட வாய்ப்புள்ளதாகவும், இதனால் கன்சர்வேடிவ்  கட்சி பாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம், […]

இலங்கை செய்தி

பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம்

  • February 17, 2026
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2474/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, விண்ணப்பதாரிகள் தமது பட்டத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதி 2026 மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் […]

error: Content is protected !!