ஐரோப்பா

லண்டனில் இரு பேருந்துகள் மோதி விபத்து – 06 பேர் காயம்!

  • February 18, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள நியூவிங்டன் காஸ்வேயில்  (Newington Causeway) இன்று இரண்டு பேருந்துகள் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 06 பேர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லண்டன் ஆம்புலன்ஸ் சேவை, பெருநகர காவல்துறை மற்றும் லண்டன் தீயணைப்புப் படை உள்ளிட்ட தரப்பினர் முதலுதவிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் விபத்து தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

ஓரணியில் திரண்டு பிரிட்டன் துணை பிரதமரை சந்தித்த தமிழ்த் தலைவர்கள்!

  • February 18, 2026
  • 0 Comments

இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரிட்டன் எப்போதும் துணைநிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டனின் துணை பிரதமருக்கும், தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று (18) நடைபெற்றது. இதன்போது நல்லிணக்கம், நீதி மற்றும் தமிழ் சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது என கூறப்படுகின்றது. அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கவும், நீதி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், தமிழ் பிரதிநிதிகளின் குரலை தொடர்ந்து […]

இலங்கை செய்தி

ரணிலின் மனைவியிடமும் விசாரணை வேட்டை: 20 ஆம் திகதி அழைப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் Ranil Wickremesinghe பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவிடம் Maithri Wickremesinghe குற்றப் புலனாய்வு பிரிவினர் CID வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர். இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அவருக்கு கொள்ளுபிட்டிய பொலிஸார் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவின் நிதிய குற்ற விசாரணைப் பிரிவுக்கே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. தனது தனிப்பட்ட பயணத்துக்கு அரச நிதியை பயன்படுத்தினார் […]

இலங்கை

இரு பேருந்துகள் மோதி கோர விபத்து – 25 பேர் வைத்தியசாலையில்!

  • February 18, 2026
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை – மாத்தறை பிரதான வீதியின் பல்லேமலல பகுதியில் இன்று (18) பிற்பகல் 1 மணியளவில், இரு பேருந்துகள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும், தனியார் பேருந்தொன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் 25 பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டு பயணிகள் மூவர் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். தெஹியத்தக்கண்டியிலிருந்து காலி நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து, தனக்கு முன்னால் […]

இலங்கை செய்தி

பிரதமர் மோடியுடன் விசேட சந்திப்பை நடத்தவுள்ள ஜனாதிபதி அநுர!

  • February 18, 2026
  • 0 Comments

‘AI Impact 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று முதல் 20 ஆம் திகதிவரை முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். அதற்கமைய ஜனாதிபதிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும்(Sergio Gor) இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் நடைபெற்றது. இதேவேளை, AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள அரச தலைவர்களுக்காக […]

இலங்கை செய்தி

7 மாத குழந்தை உயிரிழப்பு: யாழில் சோகம்!

  • February 18, 2026
  • 0 Comments

இருதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட கடுமையான நோய் பாதிப்பு காரணமாக ஏழு மாதப் பெண் குழந்தையொன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – நுணாவில் பகுதியைச் சேர்ந்த நிரூபன் ரெஸ்மிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்தக் குழந்தை பிறந்தது முதல் இருதய நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. எனினும், மேலதிக சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் […]

உலகம்

சீனாவை கலக்கும் தற்காப்புக் கலையை வெளிப்படுத்தும் ரோபோக்கள் – வியந்து பார்க்கும் உலகம்!

  • February 18, 2026
  • 0 Comments

சீனா தனது சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நன்சக் (nunchuck) வகை ரோபோக்களை வெளியிட்டுள்ளது. குறித்த ரோபோக்கள் வருடாந்திர வசந்த விழாவின் போது தங்களின் தற்காப்புக் கலைத் திறன்களை வெளிப்படுத்தியுள்ளன. தடைகளைத் தாண்டி குதிப்பது மற்றும் வாள்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை அவை வெளிப்படுத்தியுள்ளன. முந்தைய ஆண்டின் குறைவான ஆற்றல்மிக்க ரோபோ காட்சியுடன் ஒப்பிடும்போது இந்த செயல்திறன் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் சீன மனித ரோபோக்களின் விரைவான பரிணாமத்தை […]

செய்தி

சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

  • February 18, 2026
  • 0 Comments

பெரும் வெற்றியுடன் பாகிஸ்தான் Pakistan அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. T -20 உலகக்கிண்ண தொடரில் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா Namibia அணிகள் இன்று (18) மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக பர்ஹான் சதம் (100) அடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து விளையாடிய நமீபியா அணி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸை தொடர்ந்து பிரித்தானியாவை தாக்கும் புயல்!

  • February 18, 2026
  • 0 Comments

Pedro எனப் பெயரிடப்பட்ட புயல் இந்த வாரம் பிரித்தானியாவை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்த வாரத்தில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக வடக்கு அயர்லாந்தில் மழை மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்படி புயலானது பிரான்ஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

ஐரோப்பா

திடீரென நிறைவடைந்த உக்ரைன் – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை!! ஜெலென்ஸ்கி அதிருப்தி!

  • February 18, 2026
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று திடீரென நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணிநேரம் மட்டுமே இடம்பெற்ற இன்றைய விவாதத்தின்போது போர்க் கைதிகளின் பரிமாற்றம் மற்றும் பொதுமக்களின் விடுதலை உள்ளிட்ட மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  (Volodymyr Zelensky) சமீபத்திய விவாதங்களை “கடினமானது” என்று விவரித்துள்ளார். ஆனால் எதிர்கால பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒரு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய அவர், கியேவ் மற்றும் மொஸ்கோ இடையே வேறுபட்ட […]

error: Content is protected !!